Thursday, October 16, 2014

மொபைல் வைத்திருக்கும் பெண்கள் கவனத்திற்கு! ! ! !

சில நாட்களுக்கு முன் பெண் ஒருவருக்கு நடந்த நிகழ்வு இது.அவர் வைத்திருக்கும் மொபைல்க்குதே வை இல்லாத SMS மற்றும் தவறான கால்கள் வந்துள்ளது. இவர் எவ்வளவு சொல்லியும் கேட்காமல் தொடர்ந்து வந்துள்ளது. வீட்டில்சொன்னால் நீ இனி மொபைல் பயன்படுத்தாதே என சொல்லி விடுவார்கள் என பயந்து இவர் வேறுஎண் மாற்றி விட்டார் .
ஆனால் சில நாட்கள் கழித்து மீண்டும் அதே எண்ணில் இருந்து பிரச்னை.நம்பர் மாற்றியும் எப்படி இதுபோல கால் ,SMS வருகிறது என குழம்பி போனார். தனது நண்பரிடம் என்ன செய்யலாம் என கேட்டார் . அவருக்காக அவருடைய நண்பர்கள் துணையுடன் விசாரித்ததில் சில அதிர்ச்சி தகவல்கள் கிடைத்தது.
இவர் வழக்கமாக ரீ- சார்ஜ் செய்யும் இடத்தில் இவர் நம்பரை கொடுத்துவிட்டு E.C பண்ண சொல்லிவிட்டு போய் விடுவார் . இந்த நம்பரை வைத்து அங்கு உள்ள சிலர் செய்த செயல்தான் இது.
இதுபோல ஆபத்தில் நீங்கள் மாட்டாமல் இருக்க சில வழிமுறைகள்
*முடிந்த வரை ரீ-சார்ஜ் கார்ட் வாங்கி ரீ –சார்ஜ் செய்யுங்கள்
*E.C செய்யவேண்டிய நிலை வந்தால் முடிந்த வரை நன்றாக தெரிந்த கடையில் மட்டும் செய்யவும் இல்லை என்றால் உங்கள் சகோதரர்களை அல்லது ஆண் நண்பர்களை விட்டு செய்ய சொல்லவும்
*பேருந்தில் அல்லது கூட்டமாக உள்ள இடத்தில் சத்தமாக உங்கள் நம்பரை சொல்லாதிர்கள்
*தெரியாத நபர்களிடம் நம்பர் தராதீர்கள்.உங்க ள் அனுமதி இல்லாமல் உங்கள் நண்பர்கள் உங்கள் நம்பரை யாரிடமும் கொடுக்ககூடாது என சொல்லுங்கள்
*தவறான SMS வந்தால் யார் என கேட்டு பதில் அனுப்பாதிர்கள் , அப்படி அனுப்பினால் அதுமுலமாக உங்களிடம் தொடர்ந்து தொடர்பு கொள்ள முயற்சிப்பார்கள ்
*WRONG CALL வந்தால் உடனடியான துண்டித்து விடுங்கள், அடிகடி வந்தால் வீட்டில் உள்ளவர்களை அல்லது உங்களுக்கு நம்பிக்கையானஆண்களை பேச சொல்லுங்கள்
*பேருந்தில் அமர்ந்து SMS அனுப்பினால் சுற்றுபுறம் பார்த்து அனுப்புங்கள், நீங்கள்அனுப்பும ் செய்தியை அடுத்தவர்கள் படிக்க வாய்ப்புள்ளது
*மொபைலை பழுது பார்க்க கொடுத்தால் அதில் உள்ள SIM கார்டு மற்றும் Memory Card இரண்டையும் கழட்டிவிட்டு கொடுக்கவும், இல்லைஎனில் நீங்கள் அழித்த புகைப்படங்கள், வீடியோக்கள் அனைத்தையும் திருப்ப எடுத்துவிடுவார்கள்
முக்கிய பின்குறிப்பு : இது பெண்களுக்கு மட்டும் அல்ல ஆண்களுக்கும் பொருந்தும்.

No comments:

Ptc Websites Review Updates

Google Hot Trends